உலகம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபருக்கு தூக்கு தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் அதிபருக்கு தூக்கு தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு

webteam

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்-க்கு அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானினின் 10-வது அதிபராக 2001-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் பர்வேஷ் முஷரப். இவர் 2013ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்ததாக இவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பாகிஸ்தானின் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் நீதிமன்றம் முரஷப்பிற்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது. இவர் உடல்நலக் குறைவால் தற்போது துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.