ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (யு.என்.எஸ்.சி) சமீபத்தில் வெளியிட்ட புதிய பயங்கரவாத பட்டியலுக்கு ஏற்ப ஹபீஸ் சயீத், மசூத் அசார் உட்பட 88 பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (யு.என்.எஸ்.சி) சமீபத்தில் வெளியிட்ட புதிய பயங்கரவாத பட்டியலுக்கு ஏற்ப இந்த வார தொடக்கத்தில் 88 பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி வெளியிட்டன. இந்த பட்டியலில் 26/11 மும்பை தாக்குதலுக்கு காரணமானவராக கருதப்படும் ஹபீஸ் சயீத் மற்றும் ஜாகூர் ரெஹ்மான் லக்வி, ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) தலைவர் மசூத் அசார் மற்றும் நிழல் உலக டான் தாவூத் இப்ராஹிம் ஆகியோர் அடங்குவர்.