உலகம்

'காத்மாண்டுவில் இருக்கும் நேபாள்' குழப்பத்தில் இம்ரான் கான் - கேலி செய்த நெட்டிசன்கள்

'காத்மாண்டுவில் இருக்கும் நேபாள்' குழப்பத்தில் இம்ரான் கான் - கேலி செய்த நெட்டிசன்கள்

Veeramani

காத்மண்டுவில் உள்ள நேபாளத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ரகசிய சந்திப்பு நடந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியது நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இம்ரான் கான் 2019 ஆம் ஆண்டில், ஜப்பான் ஜெர்மனியுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது என்று கூறியது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்   பிரான்ஸை ஜப்பான் என்று தவறாகக் கருதி இந்த கருத்தை தெரிவித்ததை பலரும் கேலி செய்தனர்.



இதேபோல 2018 ஆம் ஆண்டில், அவர் ஆப்பிரிக்காவை "வளர்ந்து வரும் நாடு" என்று கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அந்த வரிசையில் தற்போது, நவாஸ் ஷெரீப் நரேந்திர மோடியை  காத்மண்டுவில் உள்ள நேபாளத்தில் ரகசியமாகச் சந்தித்ததாகக் கூறியது மற்றொரு விமர்சனமாக மாறியுள்ளது. நேபாள நாட்டில்தான் காத்மண்டு நகரம் உள்ளது.

இந்த கருத்து டிவிட்டரில் வைரலான நிலையில், 'நேபாளம் காத்மாண்டுவில் இருப்பது தனக்குத் தெரியாது' என்று பலரும் இம்ரான் கானை கேலி செய்தனர்.



இதுபோலவே 2021 இல், இம்ரான் கான் உஸ்பெகிஸ்தானுக்கு பயணம் சென்றபோது, உஸ்பெகிஸ்தானின் வரலாற்றைப் பற்றி உஸ்பெக் மக்களை விட தனக்கு அதிகம் தெரியும் என்று கூறியதும் விமர்சனத்துக்கு உள்ளானது.