உலகம்

எண்ணெய் லாரி கவிழ்ந்து 120 பேர் உடல் கருகி பலி

எண்ணெய் லாரி கவிழ்ந்து 120 பேர் உடல் கருகி பலி

webteam

பாகிஸ்தானில் எண்ணெய் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் 120-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பலியாகினர்.  

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள பஹவல்பூர் நகரில் எண்ணெய் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், லாரியிலிருந்து சாலையில் சிந்திய எண்ணெய்யை பிடிக்க அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் முண்டியடித்தனர். அப்போது திடீரென தீப்பற்றியதால் எண்ணெய் பிடிக்க லாரியை சூழ்ந்திருந்த 120க்கும் மேற்பட்டோரும் உடல் கருகி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் படுகாயமடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த விபத்தின்போது அங்கு சிலர் புகைப்பிடித்து கொண்டிருந்தததாகவும், இதனால்தான் டேங்கர் லாரி வெடித்து சிதறியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.