உலகம்

பாக். வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை? 

பாக். வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை? 

webteam

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையில் பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட இருப்பதாக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா நடத்திய பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து, தங்கள் நாட்டு எல்லைக்குட்பட்ட வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தடை விதித்தது. இந்தத் தடை பிப்ரவரி 27 ‌ம் தேதி முதல் ‌ஜூலை 16 ஆம் தேதி வரை 138 நாள்கள் நீடித்தது. இந்நிலையில், காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கியதற்கு, பாகி‌ஸ்தான் ‌கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக தங்கள் நாட்டு வான் எல்லையில் இந்திய விமானங்களுக்கு மீண்டும் பாகிஸ்தான் தடை விதிக்க இருப்பதாக அந்நாட்டு அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் சௌத்ரி ஃபவாத் ஹுசேன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமை‌ச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்‌.