உலகம்

இந்தியாவுக்கு வான்வழியைத் திறந்தது பாகிஸ்தான்

இந்தியாவுக்கு வான்வழியைத் திறந்தது பாகிஸ்தான்

webteam

இந்திய விமானங்கள் தங்கள் வான் வழியாக பறக்கும் வகையில் பாகிஸ்தான் தனது வான்வழியை திறந்துள்ளது. 

பாலாகோட் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக, தனது வான்வழியை இந்திய விமானங்கள் பயன்படுத்த, பாகிஸ்தான் தடை விதித்தது. கிர்கிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றபோது, பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த இயலாததால், பிரதமரின் விமானம் வேறு வழியைத் தேர்வு செய்ய நேர்ந்தது. 

இந்நிலையில், கர்தார்பூர் குருத்வாராவுக்கு வழியைத் திறந்து விடுவது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டிருந்த சூழலில், தனது வான்வழியையும் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் திறந்துவிட்டுள்ளது. 

நள்ளிரவு 12.41க்கு திறக்கப்பட்ட வான்வழியில் இந்திய விமானங்கள் விரைவில் பயணிக்கத் தொடங்கும் எனத் தெரிகிறது.