பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, போலி வங்கிக் கணக்குகள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கணவரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஆசிஃப் அலி சர்தாரி போலி வங்கிக் கணக்குகளை வைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்தப் போலி கணக்குகள் மூலம் பாகிஸ்தானில் இருந்து, வெளிநாட்டுக்கு அவர் சட்டவிரோதமாக 15 கோடி வரை பணப் பரிமற்றம் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் சர்தாரியும், அவரது சகோதரி ஃபர்யால் தால்பூரும் தாக்கல் செய்த முன் ஜாமீனை நீட்டிக்கக் கோரும் மனுவை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் உள்ள சர்தாரி வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர். எனினும் அவரது சகோதரர் ஃபர்யால் கைது செய்யப்படவில்லை. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.