உலகம்

பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிய பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்த பாக். தடை

பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிய பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்த பாக். தடை

JustinDurai

பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிய பெண்கள் மீது கன்னித்தன்மை பரிசோதனை நடத்த பாகிஸ்தான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம், லாகூர் உயர்நீதிமன்றத்தில் கன்னித்தன்மை பரிசோதனை குறித்து வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணத்தில், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பியவர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்த அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர்களிடம் அவர்களது கன்னித்தன்மையை உறுதி செய்ய நடத்தப்படும் இரு விரல் சோதனை சட்டவிரோதமானது என்றும் அறிவித்தது. இதற்கு மருத்துவ அடிப்படை இல்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தை புண்படுத்தும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.