பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதி குறித்து ஆவணங்களை சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியை குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாபர் என்பவர் தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்திருந்தார். எனினும் பிடிஐ கட்சி, முறையான ஆவணங்களை வெளியிட மறுப்பதாக சாடியிருந்தார்.
இதனை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த பணியை தங்களின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளது. வெளிநாட்டு நிதி தொடர்பான ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட ஆணையிட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: ”சட்டம் 370 ரத்துக்குப் பின் ஜம்மு காஷ்மீரில் 541 பயங்கரவாத தாக்குதல்”- உள்துறை அமைச்சகம்