ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மாணவி இனவெறி சர்ச்சையால் விலகினார்.
இங்கிலாந்தில் அமைந்துள்ள உலக புகழ் பெற்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மாணவி இனவெறி சர்ச்சையால் அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிபால் டவுனை சேர்ந்த ராஷ்மி சமந்த் தான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்வாகியிருந்தார்.
மொத்தம் இருந்த 3708 வாக்குகளில் 1966 வாக்குகளை பெற்று தலைவராக தேர்வாகியிருந்தார். இந்நிலையில் அவர் மீது சமூக வலைத்தளங்களில் இனவெறி ரீதியிலான சர்ச்சை வெடித்ததை அடுத்து அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தின் முதல் இந்திய பெண்ணான ராஷ்மி சமந்த் தேர்வாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.