இந்திய வம்சாவளியும் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிசை இந்துக்கடவுளான துர்காவாக சித்தரித்து வெளியிடப்பட்ட புகைப்படம் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது.
துர்காவாக சித்தரிக்கப்பட்ட கமலா ஹாரிஸ், அதிபர் ட்ரம்பை வதம் செய்வது போன்ற கிராபிக்ஸ் புகைப்படத்தை அவரது உறவினர் மீனா ஹாரிஸ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் துர்காவின் வாகனமான சிங்கம், ஜோ பைடன் முகமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ட்விட்டரிலிருந்து அந்த புகைப்படம் நீக்கப்பட்டது.
இந்த நிகழ்வு இந்து சமூகத்தை புண்படுத்துவதாகவும், இதற்காக மீனா ஹாரிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமெரிக்காவிலுள்ள இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.