உலகம்

ஏழை - பணக்காரர் என்ற பெரும் பிளவை சுட்டிக்காட்டிய திரைப்படம்: ஆஸ்கர் விருது வென்ற பாராசைட்!

ஏழை - பணக்காரர் என்ற பெரும் பிளவை சுட்டிக்காட்டிய திரைப்படம்: ஆஸ்கர் விருது வென்ற பாராசைட்!

webteam

கேன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வாங்கி குவித்துள்ள‌ ‘பாராசைட்’ திரைப்படம் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது

92-வது முறையாக நடைபெறும் ஆஸ்கர் விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறந்த திரைக்கதைக்கான விருதை கொரிய மொழியில் வெளியான Parasite திரைப்படம் வென்றது. கேன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வாங்கி குவித்துள்ள‌ பாராசைட் திரைப்படம் ஆஸ்கர் விருதையும் தட்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறந்த திரைக்கதைக்கான விருதை தட்டிச்சென்றுள்ளது.

எது நடந்தாலும் கவலையில்லை என்ற மனநிலையைக் கொண்ட ஏழைக் குடும்பத்திற்கும், எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்யும் பெரும் பணக்காரக் குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டை சித்தரிக்கும் திரைப்படம் ‘பாராசைட்’. தென்கொரிய இயக்குநர் போங்-ஜூன்- ஹோவின் மற்றுமொரு வியக்கத்தக்க படைப்பு இது. பணம் ஒரு மனிதனின் நடத்தையையும் எண்ணத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாக இருக்கிறது என்பதை அரசியல் பின்புலத்துடன் கூற முற்படுகிறது பாராசைட்.

படம் நெடுக குறியீடுகளுடன் தென் கொரியாவின் சமூகக் கட்டமைப்பை உதாரணமாக எடுத்துக் கொண்டு, பூமியெங்கும் உள்ள ஏழை - பணக்காரர் என்ற பெரும் பிளவை சுட்டிக்காட்டியது பாராசைட். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் உள்ளிட்ட பிரிவுகளிலும் பாராசைட் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.