உலகம்

லாஸ் ஏஞ்சல்ஸில் நாளை ஆஸ்கர் விழா கோலாகலம் - வில் ஸ்மித்துக்கு கிடைக்குமா விருது?

லாஸ் ஏஞ்சல்ஸில் நாளை ஆஸ்கர் விழா கோலாகலம் - வில் ஸ்மித்துக்கு கிடைக்குமா விருது?

Sinekadhara

உலகெங்கும் உள்ள திரையுலகினரின் கனவு விருது ஆஸ்கர். அத்தகைய ஆஸ்கர் விருது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நாளை வழங்கப்பட உள்ளது.

94ஆவது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவில் சிறந்த படத்திற்கான விருதுக்கு பல படங்கள் போட்டியிட்டாலும் ’கிங் ரிச்சர்டு’ என்ற படம் அதிக விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல டென்னிஸ் சகோதரிகள் வீனஸ் வில்லியம்ஸ் - செரீனா வில்லியம்ஸ் ஆகியோரை சாதனைப்பெண்களாக உருவாக்க அவர்களது தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸ் சந்தித்த சவால்களை விளக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர பெல்ஃபாஸ்ட், கோடா, டிரைவ் மை கார், வெஸ்ட் சைடு ஸ்டோரி போன்ற படங்களும் போட்டியில் உள்ளன.

'கிங் ரிச்சர்ட்' படத்தில் செரீனா மற்றும் வீனசின் தந்தை வேடத்தில் நடித்த வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான போட்டியில் உள்ளார். இவர் தவிர ஜேவியர் பார்தம், பெனடிக்ட் கம்பர்பேட்ச் உள்ளிட்டோரும் ஆஸ்கரை தட்டிச்செல்வதற்கான போட்டியில் உள்ளனர். நடிகைகள் பிரிவில் நிகோல் கிட்மேன், ஒலிவியா கோல்மேன், கிறிஸ்டின் ஸ்டீவர்ட், ஜெஸிகா செஸ்டெய்ன் உள்ளிட்டோர் போட்டியில் உள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இவ்விழா நடைபெற உள்ளது.