orangutan  orangutan
உலகம்

காயத்தை குணப்படுத்த மஞ்சள்… ஓரங்குட்டான் சாமர்த்தியம்… ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம்..!

karthi Kg

முகத்தில் உண்டான காயத்தை சரி செய்ய, ஆண் ஓரங்குட்டான் ஒன்று மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடியை பயன்படுத்தியிருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

காட்டு விலங்கு ஒன்று காயத்தை குணப்படுத்த மூலிகையைச் செடியை பயன்படுத்தியிருப்பதை இப்போதுதான் மனிதர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். செடிகளை மருத்துவ பயன்பாட்டுக்கு மனிதர்களைப் போல விலங்குகளும் பயன்படுத்துவது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

Orangutan

35 வயதான ராகூஸ் என்கிற ஆண் ஓரங்குட்டான் சுமத்தரா தீவிலிருக்கும் கனங் லீசர் தேசிய பூங்காவில் வசித்து வருகிறது. பல ஆண்டுகளாகவே ஓரங்குட்டான்களின் செயல்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் கவனித்துவருகிறார்கள். காடுகளை சல்லடை போட்டு தேடி அலையும் ஓரங்குட்டான்கள் தனக்கு விருப்பமான  பழங்களை உண்ணும் பழக்கத்தையும் ஆராய்ச்சிகள் கவனித்துவருகிறார்கள். 

2002ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி ஓரங்குட்டானின் முகத்தில் காயம் இருப்பதையும், அதன் மீது மூலிகைச் செடியை கசக்கி மருந்து போல் ஓரங்குட்டான் பூசியிருப்பதையும் அங்கிருக்கும் ஆராய்ச்சியாளர் ஒருவர் கவனித்து இருக்கிறார். ராகூஸ் , தன் முகத்தில் இருக்கும் காயத்தை குணப்படுத்த தேர்ந்தெடுத்தது மஞ்சள் வேர். ஆம், நம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மஞ்சளைத்தான் ஓரங்குட்டானும் தன் முகத்தில் காயம் நீங்க பயன்படுத்தியிருக்கிறது.

பொதுவாக ஓரங்குட்டான்கள் மஞ்சள் செடியை உணவாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், இந்த ஓரங்குட்டான் மஞ்சளை கடித்து , அதனை பேஸ்ட் போல் முகத்தில் பூசியிருக்கிறது. ஒரு மாதம் கழித்து அந்தக் காயம் இருந்த தடம் தெரியாமல் குணமாகிவிட்டதாம். 

ஜப்பானி  நாகசாகி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மைக்கேல் ஹவ்மேன், “ மிருகம் ஒன்று காயத்தை சரிசெய்ய செடிகளை மருந்தாக பயன்படுத்துவது குறித்து ஸ்டடி செய்யப்படுவது இதுவே முறை. “ என தெரிவித்திருக்கிறார். 

orangutan

உடம்பிலுள்ள காயத்தை சரி செய்ய மிருகங்கள் வேறு சில டெக்னிக்கையும் பிரயோகித்து இருக்கின்றன. மத்திய ஆப்பிரிக்காவில் வாழும் சிம்பன்ஸிகள் பூச்சிகளை கடித்து, கூழாக்கி காயங்களின் மேல் பூசிக்கொள்வதுண்டு. 2017ம் ஆண்டு, போர்னியோவில் இருக்கும் ஆறு ஓரங்குட்டான்கள் தசை வலியில் இருந்து விடுபட சில மூலிகைகளை பயன்படுத்தியிருக்கின்றன. 

இந்திய புனுகுப்பூனை வயிற்றில் இருக்கும் பூச்சிகளைக் கொல்ல சில இலைகளை உண்பது உண்டு. அதே போல், தங்கள் உடலில் ஏதேனும் பிரச்னை என்றால், எறும்புகளைத் தான் தேடும். சில பறவைகள் எறும்புகள் அதிகமாக ஊர்ந்து செல்லும் இடங்களை நோக்கி பறந்து, அதன்மீது அமர்ந்துகொள்ளுமாம்.தன் உடலில் இருக்கும் பாராசைட்டுகளிடம் இருந்து விடுபட இந்த டெக்னிக்கை பறவைகள் கையாள்வதுண்டு. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் தான். ஓரங்குட்டான்களால் மனிதர்களைப் போலவே புதிர்களுக்கான விடையைக் கண்டுபிடிக்கப்படும் என மனிதர்கள் உணர்ந்திருந்தார்கள். 

இயற்கையும், அதோடு பின்னிப் பிணைந்து வாழும் மிருகங்களும் இதுபோன்ற நிறைய ஆச்சர்யங்களை தங்களுக்குள் வைத்திருக்கின்றன. நாம் நமக்கு மட்டுமே ஆறறிவு என பெருமை பீத்திக்கொண்டு இருக்கிறோம்.