பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் 3ஆவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒமைக்ரான் வகை தொற்று வேகமாக பரவுவதால் இம்மாத இறுதிக்குள் மக்கள் 3ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென பிரதமர் போரிஸ் ஜான்சன் அண்மையில் அறிவுறுத்தியிருந்தார், பிரிட்டனில் ஒமைக்ரானுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார். ஒமைக்ரான் தொற்றால் உலகளவில் ஏற்பட்ட முதல் இறப்பாக இது பார்க்கப்படுகிறது, இதனால் பிரிட்டன் தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதை காண முடிகிறது.
பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே ஒமைக்ரான் தொற்று சீனாவுக்கும் பரவியுள்ளது. வடக்கு சீனாவின் துறைமுக நகரமான டியான்ஜின்னில் ஐரோப்பாவில் இருந்த வந்த ஒரு நபருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது