ஒமைக்ரான் பரவல் காரணமாக, நெதர்லாந்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில், கொரோனா ஐந்தாவது அலை பரவி வருகிறது. நாளுக்கு நாள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் வருகிற ஜனவரி 14ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவல் காரணமாக, பிரான்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன, பல்வேறு நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அமலாகவுள்ளது.