காங்கோ நாட்டில் எண்ணெய் லாரி வெடித்த விபத்தில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தலைநகர் கின்ஷாசாவில் இருந்து மிடாடி துறைமுகம் நோக்கி எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, கிசேன்ட் நகர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. கவிழ்ந்த லாரியில் இருந்து வெளியேறிய எண்ணெயை பிடிக்க நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடினர். அப்போது திடீரென லாரி வெடித்ததால் அவர்கள் அனைவரும் தீயில் சிக்கிக்கொண்டனர்.
தீயில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்த நிலையில் பலத்த தீக்காயங்களுடன் சுமார் 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுவோரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.