வடகொரியா சோதனை செய்த அணு ஆயுதத்தின் எடை சுமார் 50 கிலோ டன் இருக்கலாம் என்று தென்கொரியா மதிப்பீடு செய்துள்ளது.
வடகொரியா சுமார் 50 கிலோ டன் (1 கிலோ டன் = 1000 டன் டிஎன்டி வெடிப்புக்கு சமம்) எடை கொண்ட அணு ஆயுதத்தை பயன்படுத்தி சோதனை நடத்தியிருக்கலாம் என்று தென்கொரியா உத்தேசமாக மதிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வடகொரியா மேற்கொண்ட சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட அணு ஆயுதத்தைவிட ஐந்து மடங்கு அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றும் தென்கொரியா கருதுகிறது.
வடகொரியா தற்போது பயன்படுத்திய அணு ஆயுதத்தின் அளவு, இரண்டாம் உலகப்போரின்போது ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய அணு ஆயுதத்தைவிட மூன்று மடங்கு அதிகமானதாக இருக்கும் என்று மதிப்பிடப்பிடுகிறது.