உலகம்

வடகொரியா மிரட்டல்: அமெரிக்காவின் ராணுவ வலிமை மீது குவாம் மக்கள் நம்பிக்கை

வடகொரியா மிரட்டல்: அமெரிக்காவின் ராணுவ வலிமை மீது குவாம் மக்கள் நம்பிக்கை

webteam

வடகொரியா குவாம் தீவை தாக்கப்போவதாக கூறியுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் அமெரிக்காவின் ராணுவ வலிமை மீது நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளனர்.

வடகொரியாவின் ஏவுகணை மிரட்டலால் அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எனினும் வடகொரியாவின் அறிவிப்பு வெற்று மிரட்டலாகவே முடியும் என்று பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வடகொரியாவின் மிரட்டல், குவாம் தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை வெகுவாகப் பாதிக்கும் எனவும் கருதப்படுகிறது.

வடகொரியாவின் மிரட்டல் குறித்து குவாம் தீவு வாசியான கிலாரிஸா கூறும்போது, வடகொரியாவின் இந்த மிரட்டல் எனக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. நாங்கள் இங்கு மிகவும் அமைதியாக வாழ்ந்து வருகிறோம். என்னைப் பொருத்த வரையில் வடகொரியாவின் இந்த மிரட்டல் முட்டாள்தனமான ஒன்று. ஏனென்றால் எனக்கு அமெரிக்காவின் வலிமை குறித்து முழு நம்பிக்கை உள்ளது என்றார்.