சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதனை செய்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க, ஐநா பாதுகாப்பு சபையின் அவசரக்கூட்டத்தை கூட்டுமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் நேற்று சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்ற வேளையில், வடகொரியா மீண்டும் ஜப்பான் கடற்பகுதியை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. வடகொரியா இந்த சோதனையை நடத்தியிருப்பது, அமெரிக்காவிற்கு வடகொரியா விடுக்கும் மறைமுக எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது. இதனிடையே வடகொரியாவின் ஏவுகணை சோதனை முயற்சிக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க, ஐநா பாதுகாப்பு சபையின் அவசரக்கூட்டத்தை கூட்டுமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இன்று அந்தக் கூட்டம் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.