உலகம்

அத்துமீறும் வடகொரியா - ஐ.நா. அவசர ஆலோசனை

அத்துமீறும் வடகொரியா - ஐ.நா. அவசர ஆலோசனை

webteam

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு அமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

அமெரிக்‍கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால், வடகொரியா மீது ஐ.நா. கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், ஜப்பானை அச்சுறுத்தும் வகையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா இன்று மீண்டும் சோதனை செய்துள்ளது. ஜப்பான் நாட்டின் ஹோக்கைடோ தீவு வழியாக பாய்ந்து சென்ற இந்த ஏவுகணை பசிபிக் கடலில் விழுந்தது.

இந்நிலையில், வடகொரியாவின் அத்துமீறல் தொடர்பாக விவாதிக்‍க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.