வடகொரியா ஜப்பான் கடல் பகுதியை நோக்கி ஏவுகணைகளை வீசி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் சின்போ துறைமுகத்தில் இருந்து இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் அவை தங்கள் நாட்டு கடல்பகுதியில் விழுந்ததாகவும் ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது. தென் கொரிய ராணுவமும் இதனை உறுதி செய்துள்ளது. வடகொரியா, நீர்மூழ்கி கப்பலில் இருந்து இந்த ஏவுகணையை வீசி சோதனை செய்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கட்டுப்பாடுகளை மீறி வடகொரியா அண்மைகாலமாக தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. பதிலுக்கு தென்கொரியாவும் ஏவுகணை சோதனைகளை நடத்துவதால் கொரிய பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகிறது.