உலகம்

மேலும் 2 ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளிடையே எதிர்ப்புகளை சம்பாதித்த வடகொரியா

மேலும் 2 ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளிடையே எதிர்ப்புகளை சம்பாதித்த வடகொரியா

நிவேதா ஜெகராஜா

வடகொரியா மேலும் 2 ஏவுகணைகளை பரிசோதித்து பார்த்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா செலுத்திய ஏவுகணைகள் தங்கள் நாட்டு பொருளாதார மண்டலத்திற்கு அருகில் விழுந்ததாக தெரிவித்துள்ள ஜப்பான், இந்தச் செயலை கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் அமெரிக்காவும் கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்கா அளித்த தகவலின்படி, ‘வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளால் தங்களுக்கு பாதுகாப்பு ரீதியாக அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும்கூட, அது அந்நாட்டின் சட்டவிரோத ஆயுத திட்டங்களை காட்டுகிறது’ எனக் கூறியுள்ளது.

வட கொரியா ஏற்கனவே கடந்த 5 மற்றும் 11ஆம் தேதிகளில் ஏவுகணைகளை சோதித்தது பெரும் எதிர்ப்புகளை சம்பாதித்தது. அப்போதேவும் வடகொரியா மீது புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரித்திருந்தது. எனினும் அவற்றை புறம்தள்ளிவிட்டு மேலும் இரு சோதனைகளை வடகொரியா செய்துள்ளது.