உலகம்

''அணு ஆயுதங்களை கைவிடும் முடிவில் மாற்றமில்லை'' - கிம் ஜாங் உன்

webteam

அணு ஆயுத திட்டங்களை கைவிடும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

வடகொரியா சென்றுள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொரிய தீபகற்பத்தின் அமைதிக்காக கிம் ஜாங் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெ‌ரிவித்ததாக கூறினார். மேலும் விரைவில் ரஷ்யாவுக்கு வரும்படியும் அதிபர் புடின் சார்பில் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதித்தாக வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

அதில் ஏற்கெனவே அறிவித்தபடி அணு ஆயுத திட்டங்களை கைவிடும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அதிபர் கிம் ஜாங் உன் உறுதியளித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவுடனான நல்லுறவு மற்றும் அணு ஆயுதம் இல்லா கொரிய தீபகற்பத்தை உருவாக்குவது போன்றவை படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.