உலகம்

கொரோனா தொற்றிலிருந்து தப்பிய நாடுகள் எவை ?

jagadeesh

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்தாலும், 12 நாடுகளில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.

ஆப்ரிக்க கண்டத்தைச் சேர்ந்த 7 நாடுகளிலும், ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 நாடுகளிலும் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தெற்கு சூடான், காமோராஸ், மாலாவி, போஸ்ட்வானா, புருண்டி, சியாரா லியோ, சவுவ் டோமே அன்ட் பிரின்சிபி ஆகிய ஆப்பிரிக்க நாடுகளும், ஆசியாவில் வடகொரியா, மியான்மர், தஜ்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளும் கொரோனா பிடியிலிருந்து தப்பியுள்ளன. இதேபோல பசிபிக் பெருங்கடலில் உள்ள குட்டி தீவுகள் சிலவற்றிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. அதேநேரத்தில் ஐரோப்பியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா கண்டங்களில் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜப்பானில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக டோக்கியோ நகரில் மட்டும் 70 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளர், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதே அரசின் பிரதான நோக்கம் எனத் தெரிவித்தார்.