நோபல் பரிசு வென்றவர்கள் pt web
உலகம்

2024 ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!!

PT WEB

2024ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகளுக்கான அறிவிப்பு தொடங்கியுள்ளது. இதில் முதலாவதாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு இவ்விருது கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ ஆர்என்ஏ-வை கண்டறிந்ததுடன் மரபணு ஒழுங்கமைப்பிற்கு பின் அவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்திற்கான நோபல் பரிசு என்பது சுமார் 8 கோடியே 30 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கொண்டதாகும்.

நோபல் விருதுகள் அதன் நிறுவனரின் நினைவு நாளான டிசம்பர் 10ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவத்தை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இயற்பியில், வேதியியல் போன்ற துறைகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.