நோபல் பரிசு பெற்றவர்கள் pt web
உலகம்

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு.. 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு..

2024 ஆம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

2024 ஆம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெற்றவர்கள்

புரதத்தின் வடிவம் குறித்த ஆராய்ச்சிக்காக, டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகிய மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த உயிர்வேதியியல் ஆராய்ச்சியாளர் டேவிட் பேக்கர், வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலும், பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டெமிஸ் ஹசாபிஸ், லண்டன் பல்கலைக்கழகத்திலும், அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜான் ஜம்பர் டீப்மைண்ட் டெக்னலாஜிஸ் நிறுவனத்திலும் தங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

வேதியியலுக்கான நோபல் பரிசை பெறும், மூன்று பேருக்கும், அதற்கான விருதுடன், 8.40 கோடி ரூபாய் பணம் பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.