உலகம்

சமீப காலங்களில் பிரதமர் மோடி-ட்ரம்ப் இடையே எந்தப் பேச்சும் நடைபெறவில்லை: அதிகாரிகள் தகவல்

சமீப காலங்களில் பிரதமர் மோடி-ட்ரம்ப் இடையே எந்தப் பேச்சும் நடைபெறவில்லை: அதிகாரிகள் தகவல்

PT

சமீப காலங்களில் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே எந்தப் பேச்சும் நடைபெறவில்லை என வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாத் தொற்று ஆரம்பித்ததிலிருந்தே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஊடகங்களில் பேசுபொருளானார். ட்விட்டர் பதிவுகள், கொரோனாக் குறித்த பேச்சுக்கள், சீனாவின் மீதான அதிருப்தி எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கிய ட்ரம்ப உலகத் தலைவர்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனத்திற்கும் உள்ளானார்.

இந்நிலையில் சீனா இந்தியா நாடுகளிடையே ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்னைக் குறித்துப் பேசிய ட்ரம்ப், இரு நாடுகளிடையே சமரசம் செய்ய தான் தயாராக இருப்பதாகவும், சீனா விவகாரத்தில் மோடி அதிருப்தியாக இருப்பதாகவும் பேசினார்.

இந்நிலையில் மோடி குறித்தான ட்ரம்பின் பேச்சுக்கு விளக்கம் அளித்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் சமீப காலங்களில் பிரதமர் மோடி - ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.