உலகம்

பொது இடங்களில் புகைபிடிக்க இனி அனுமதியில்லை - வடகொரியா அதிரடி உத்தரவு

பொது இடங்களில் புகைபிடிக்க இனி அனுமதியில்லை - வடகொரியா அதிரடி உத்தரவு

Sinekadhara

வடகொரியாவில் பொது இடங்களில் புகைப்பிடிக்க இனி அனுமதி இல்லை என அந்நாட்டு சட்டப்பேரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் கே.சி.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

வட கொரிய மக்களின் ஆரோக்யத்தைக் கருத்தில்கொண்டு புகையிலை தடுப்பு சட்டம், சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனையின் சமூகக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. இந்த சட்டத்தின்படி, திரையரங்குகள், மருத்துவமனைகள், அரசியல் மற்றும் கருத்தியல் கல்வி மையங்கள் உள்ளிட்ட பல பொது இடங்களில் புகைபிடித்தலை தடைசெய்துள்ளது.

2013ஆம் ஆண்டு கருத்துக் கணிப்பின்படி, வடகொரியாவில் அதிகமான ஆண்கள், அதாவது 43.9% ஆண்கள் புகைப்பிடிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் ஒரு செயின் ஸ்மோக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.