உலகம்

இம்ரான் கான் ஆட்சிக்கு சிக்கலா? என்ன நடக்கிறது பாகிஸ்தானில்?

இம்ரான் கான் ஆட்சிக்கு சிக்கலா? என்ன நடக்கிறது பாகிஸ்தானில்?

Veeramani

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும் 28ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கூறி நாடாளுமன்ற செயலாளரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதன்படி வரும் 28ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிப்பது குறித்து தலைமை வழக்கறிஞர் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை நடத்தினார்.