பன்றிகளில் பரவி வரும் புதிய வகை வைரஸை சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தேசிய அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சீன விஞ்ஞானிகள் ஒரு புதிய வகை வைரஸை கண்டுபிடித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொற்றுநோயைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இது மரபணு ரீதியாக H1N1-இடம் இருந்து வந்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் ஜி4 (G4)என அழைக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு 2009 ஆம் ஆண்டில் எச்1என்1 என்பதை ஒரு தொற்றுநோய் என அறிவித்தது. இதன் அறிகுறிகளில் காய்ச்சல், சளி மற்றும் தொண்டை புண் ஆகியவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஜி4 வைரஸ் ஏற்கெனவே விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியிலிருந்தாலும், மனிதர்களிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவுவதற்கான ஆதாரம் இதுவரை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் பன்றிகளிடம் சோதனை மேற்கொண்டதில், ஜி4 வைரஸால் பன்றிகள் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியிருப்பதும் தெரியவந்துள்ளது. அதேசமயம் ஒருமனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவியதற்கான ஆதாரம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவில்லை எனத் தெரிவிக்கப்ப்டடுள்ளது. இருப்பினும் விலங்குகளுடன் அதிக தொடர்பில் இருக்கும் நபர்களைக் கண்காணிக்க அவசர நடவடிக்கைகள் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.