உலகம்

நேபாள நாட்டின் புதிய வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு

நேபாள நாட்டின் புதிய வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு

jagadeesh

இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நேபாள நாட்டின் புதிய வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், நாடாளுமன்றம் இந்த வரைபடம் மற்றும் அதுதொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதிய நேபாள வரை படத்தை வெளியிட்டுப் பேசிய பிரதமர் ஷர்மா ஓலி " இந்தியப் பகுதிகளான காலாபானி-லிம்பியாதுரா, லிபுலேக் பகுதியை என்ன ஆனாலும் நேபாளத்திற்குக் கொண்டு வருவோம்" எனத் தெரிவித்தார். இது இருநாட்டு உறவுகளுக்கிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் சீனாவின் தூண்டுதலின் பெயரிலேயே நேபாளம் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் சர்ச்சை எழுந்தது.

இந்தியாவும் நேபாளமும்1800 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் 1816 இல் ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வைத்து லிபுலேக் கணவாயை தங்களது பகுதி என்று நேபாளம் அண்மைக்காலமாகக் கோரி வருகிறது. அதே போல் சீனாவுடன் ஏற்பட்ட 1962 போருக்குப் பிறகே இந்தியா தனது துருப்புகளை நிறுத்தியுள்ள லிம்பியாதுரா, காலாபானி பகுதியையும் நேபாளம் உரிமை கோரி வருகிறது.

இந்தியா வசம் இருக்கும் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகியவற்றை உள்ளடக்கிய வரைபடத்தை நேபாளம் கடந்த வாரம் வெளியிட்டது. இதற்கு நேபாளம் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருக்கிறது. அடுத்த கட்டமாக வரை படம் மற்றும் அதுதொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு ஒப்புதல் வழங்க நாடாளுமன்றம் மறுப்பு இப்போது தெரிவித்திருக்கிறது.