உலகம்

காற்று மாசுபடுவதைக் குறைக்க லண்டனில் புதிய வரி

காற்று மாசுபடுவதைக் குறைக்க லண்டனில் புதிய வரி

webteam

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காற்று மாசுபடுவதைக் குறைக்க கார்களுக்கு தனி வரி வசூலிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

லண்டனில் காற்று மாசுபடுவதைக் குறைக்க நகருக்குள் நுழையும் பழமையான, புகை கக்கும் வாகனங்களுக்கு 10 பவுண்டு அதாவது 850 ரூபாய் வரி விதிக்கப்படும். இந்த வரி மூலம் குறைவான புகையை வெளியிடும் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவது அதிகரிக்கும் என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் லண்டன், பாரிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 12 நகரங்கள் 2030-ம் ஆண்டு முதல் காற்று மாசு ஏற்படுத்தாத பேருந்துகளை மட்டுமே இயக்கப் போவதாக தெரிவித்துள்ளன.