உலகம்

சீனாவுடன் வர்த்தகம்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு சாலை திட்டத்தை தொடங்கும் நேபாளம்

சீனாவுடன் வர்த்தகம்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு சாலை திட்டத்தை தொடங்கும் நேபாளம்

webteam

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில், சீனாவுடனான வர்த்தகத்தை எளிதாக்க 12 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லையில் உள்ள சாலை திட்டத்தை நேபாள அரசு மீண்டும் தொடங்கியுள்ளது.

நேபாள-சீனா எல்லை வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக 2008 ஆம் ஆண்டு டர்ச்சுலா-டிங்கர் சாலை திட்டத்தின் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கடுமையான நிலப்பரப்பு மற்றும் கடுமையான வானிலை காரணமாக அரசாத் அத்திட்டத்தை முடிக்க முடியவில்லை. இந்நிலையில் டர்ச்சுலா மாவட்டத்தில் 130 கி.மீ நீளமுள்ள டர்ச்சுலா-டிங்கர் சாலை திட்டத்தின் பணிகளை நேபாள அரசு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்திற்காக சுமார் 50 கி.மீ. சாலை உத்தரகண்ட் மாநிலத்தின் இந்திய எல்லைக்கு இணையாக இயங்குகிறது. மற்றும் சாலையின் மீதமுள்ள பகுதியை முடிக்க நேபாள அரசாங்கம் தனது ராணுவத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலைத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கான முக்கிய காரணம் புலம்பெயர்ந்த கிராமங்களாக இருக்கும் டிங்கர் மற்றும் சாங்ரு மக்களை இடம்பெயர்ப்பதாக "டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் மீதமுள்ள 87 கி.மீ பாதையை முடிக்க நேபாள ராணுவம் கட்டியாபாகரில் ஒரு முகாமை அமைத்து வருகிறது. இந்தச் சாலை வர்த்தகத்தை மட்டுமல்ல, சுற்றுலாவையும் ஊக்குவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு லிபுலேக் பாஸ் மூலம் வர்த்தகம் தொடர்பான இந்தியா-சீனா ஒப்பந்தத்தை நேபாளம் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.