நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் கோஷ்டிப்பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பிரதமர் ஒலியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக எதிர்க்கோஷ்டியின் செய்தித் தொடர்பாளர் நாராயண் காஜி ஷ்ரேஷ்தா தெரிவித்தார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமர் ஒலி ஒரு குழுவாகவும் முன்னாள் பிரதமர்கள் புஷ்பகமல் தஹல் மற்றும் மாதவ் குமார் நேபாள் ஆகியோர் ஒரு குழுவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
பிரதமர் ஒலி நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை அறிவித்த நிலையில் அதற்கு எதிர்க்கோஷ்டியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரதமர் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஒலி நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசமைப்பு சாசனத்திற்கு எதிரான செயல்பாடுகளுக்காக ஒலி மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம் அளித்துள்ளது