உலகம்

"இந்தியாவில் தோன்றியது அல்ல, யோகா கலை" - நேபாள பிரதமர் ஷர்மா ஒலி சர்ச்சை பேச்சு

Sinekadhara

யோகா கலை நேபாளத்தில் தோன்றியது எனப் பேசி மீண்டும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளார் அந்நாட்டு பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி.

நேற்று சர்வதேச யோகா தினத்தையொட்டி காத்மாண்டுவில் உரையாற்றிய அவர், இந்தியா எனும் ஒரு நாடு உருவாகும் முன்னரே, யோகா கலை நேபாளத்தில் இருந்ததாக பேசியுள்ளார். அதாவது, யோகா கலையானது இந்தியாவில் உருவானது அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ராமர் நேபாளத்தில் பிறந்தவர், விசுமாத்திரர் போன்ற முனிவர்களும் அந்நாட்டில் பிறந்தவர்கள் என பேசி சர்ச்சையை விதைத்தவர் ஷர்மா ஒலி என்பது நினைவுக்கூரத்தக்கது.