உலகம்

நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாள பிரதமர் டியூபா

நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாள பிரதமர் டியூபா

Veeramani

நேபாளத்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெர் பகதூர் டியூபா ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

ஷெர் பகதூர் டியூபா இந்த வாக்கெடுப்பில் 165 வாக்குகளைப் பெற்றார். 83 உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர் என்று சபாநாயகர் அக்னி சப்கோட்டா அறிவித்தார். 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல அவருக்கு குறைந்தபட்சம் 136 வாக்குகள் தேவைப்பட்டன.

கே.பி. சர்மா ஓலிக்கு பதிலாக, டியூபாவை பிரதமராக நியமிக்க நேபாள உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. 75 வயதான நேபாளி காங்கிரஸ் தலைவர் டியூபா ஜூலை 13 அன்று பிரதமராக பதவியேற்றார் .

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் பிரிவு) மற்றும் ஜனதா சமாஜ்வாடி கட்சி (ஜேஎஸ்பி) உபேந்திர யாதவ் பிரிவு ஆகியவை இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது டியூபாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. நாடாளுமன்றத்தில் தற்போது ஆளும் நேபாளி காங்கிரஸில் (என்.சி) 61 உறுப்பினர்களும், அதன் கூட்டணி கட்சியான சிபிஎன் (மாவோயிஸ்ட் ) சபாநாயகர் சப்கோட்டாவைத் தவிர்த்து 48 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஓலியின்  பிரதான எதிர்க்கட்சியான சிபிஎன்-யுஎம்எல் 121 உறுப்பினர்களும், ஜேஎஸ்பிக்கு 32 உறுப்பினர்களும், மற்ற மூன்று கட்சிகளும் தலா ஒரு உறுப்பினரும், ஒரு சுயேட்சை உறுப்பினரும் உள்ளனர்.