உலகம்

நேபாள விமான விபத்து: உயிரிழந்த 22 பேரின் உடல்களும் மீட்பு - கருப்பு பெட்டி கிடைத்தது

நேபாள விமான விபத்து: உயிரிழந்த 22 பேரின் உடல்களும் மீட்பு - கருப்பு பெட்டி கிடைத்தது

Veeramani

நேபாள நாட்டில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த 22 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. விமான விபத்து குறித்து கண்டறிய கருப்பு பெட்டியையும் கைப்பற்றியது மீட்பு குழு.

நேபாள நாட்டின் பொதுத்துறை நிறுவனமான "தாரா ஏர்லைன்ஸ்"-க்கு சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானம் நேற்று 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 16 நேபாளிகள் மற்றும் 3 விமான பணியாளர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானம் விபத்தில் சிக்கியது. விபத்து நடந்த இடம் 14,500 அடி உயரத்தில் உள்ளதால் ஹெலிகாப்டர் மூலமாக 15 நேபாள ராணுவ வீரர்கள் 11 ஆயிரம் அடி உயரத்தில் இறக்கி விடப்பட்டு அங்கிருந்து விபத்து நடந்த இடத்திற்கு காடுகள் வழியாக சென்ற மீட்டுக் குழுவினர் இதுவரை 22 உடல்களை மீட்டுள்ளனர்.



மீட்கப்பட்ட 22 பேரின் உடலும் நேபாள தலைநகர் காத்மாண்டுவிற்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மீட்பு குழுவின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும் விமான விபத்து குறித்து கண்டறிவதற்காக விமானத்தில் கருப்பு பெட்டி (Black Box) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை விமானத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த பிறகு அவர்களின் விசாரணையில் விமானத்தின் விபத்து குறித்து முழுமையாக தெரியவரும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டதாகவும், விமானத்தில் பயணித்த நான்கு இந்தியர்கள் உட்பட ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை எனவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.