உலகம்

தவறாக வழிகாட்டிய கூகுள் மேப் : ஒரே நேரத்தில் சிக்கிய 100 கார்கள் 

தவறாக வழிகாட்டிய கூகுள் மேப் : ஒரே நேரத்தில் சிக்கிய 100 கார்கள் 

webteam

கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் 100 கார்கள் ஒரு இடத்திற்குப் படையடுத்து வந்துள்ளன. 

தொழில்நுட்ப சாதனங்கள் மிகவும் வேகமாகவும் சிறப்பானதாக இருந்தாலும் அவற்றில் தவறு ஏற்பட்டால் அதன் விளைவு விபரிதமாக முடியும். அவ்வாறு கூகுல் மேப் செயலியின் தவறான வழிகாட்டுதலால் ஏறக்குறைய 100 வாகன ஓட்டுநர்கள் ஒரே இடத்தில் சென்று அவதிப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கோலோராடோ (Colorado) மாநிலத்திலுள்ள டென்வர்(Denver)  சர்வதேச விமான நிலயத்திற்கு சிலர் வழியை கூகுள் மேப்பில் தேடியுள்ளனர். 

அவர்களுக்கு குறைவான நேரத்தில் கடக்கும் வகையில் கூகுள் மேப் ஒரு பாதையை காண்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தப் பாதை குறைந்த நேரத்தில் விமான நிலையத்தை சென்றடையும் என்பதால் தேர்வு செய்துள்ளனர். ஆனால் இந்த வழி தவறான வழியாக இருந்துள்ளது. அத்துடன் இந்தப் பாதை மிகவும் மோசமான சாலைகளைக் கொண்டதாக இருந்துள்ளது. எனவே இந்தப் பாதையில் சுமார் 100 வாகனங்கள் சிக்கித் தவித்துள்ளன. 

இதுதொடர்பாக இந்தப் பாதையில் பயணித்த கான்னி மான்சிஸ், “நான் என்னுடைய கணவரை அழைத்துவர விமான நிலையத்திற்குச் சென்றேன். அப்போது குறைந்த நேரத்தில் செல்லக்கூடிய பாதை குறித்து கூகுள் மேப்பில் தேடினேன். இதற்கு கூகுள் மேப் நான் செல்லும் பாதையைவிட குறைந்த நேரத்தில் மற்றொரு பாதையைக் காட்டியது. அந்த வழியில் சென்ற போது தான் தெரிந்து சுமார் 100 வாகனங்கள் இதேபோல தவறாக வந்தது” எனக் கூறினார். 

இந்தச் சம்பவம் குறித்து கூகுள் நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில், “நாங்கள் ஒரு வழியை தேர்வு செய்து காட்டும் போது சாலையின் அளவு மற்றும் பாதையில் பயணிக்கும் நேரம் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்துதான் காட்டுவோம். சில நேரங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறுவது தவிர்க்க முடியாதது” எனத் தெரிவித்துள்ளது.