உலகம்

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் மீதான பனாமா ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் மீதான பனாமா ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

webteam

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மீதான பனாமா ஊழல் வழக்கு வரும் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் குடும்பத்தினர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நவாஸ் ஷெரிப்பை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து, பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி நவாஸ் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறு தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பாக நவாஸ் விசாரணைக்கு ஆஜராகுமாறு, தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் அவருக்கு சம்மன்களை அனுப்பியது. பல்வேறு காரணங்களால் அவர் ஆஜராகாத நிலையில், கடந்த 26ஆம் தேதி ஜாமினில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் நவாஸ் மீது பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பலத்த பாதுகாப்புக்கிடையே நவாஸ் ஷெரிப் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது வழக்கை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.