உலகம்

விசாரணையை எதிர்கொள்ள நாடு திரும்பினார் நவாஸ் ஷெரீஃப்

விசாரணையை எதிர்கொள்ள நாடு திரும்பினார் நவாஸ் ஷெரீஃப்

webteam

பனாமா ஆவண ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் பொருட்டு முன்னாள் பிரதமர் இன்று பாகிஸ்தான் திரும்பினார்.

மனைவி குல்சூமின் தொண்டை புற்றுநோய் சிகிச்சைக்காக ஷெரீஃப் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் தங்கி இருந்தார். இதற்கிடையில் நாளை நடைபெறும் பனாமா ஆவண ஊழல் வழக்கு விசாரணையில் ஷெரீஃப் நேரில் ஆஜாராக வேண்டும். வழக்கு தொடர்பாக கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த ஷெரீஃப் பாகிஸ்தான் திரும்ப முடிவு எ‌டுத்தார். அதன் அடிப்படையில் ஷெரீஃப் இன்று காலை இஸ்லாமாபாத் விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு  ஆதரவாளர்களும், கட்சித் தொண்டர்களும் உற்சாக  வரவேற்பு அளித்தனர். பதவியில் இருந்து உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்ட நவாஸ், எம்.பி. பதவியையும் இழந்தார். அவரது தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நவாஸ் ஷெரிப்பின் வருகை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த அவரது மகள் மரியம் ஷெரிப், இந்த வழக்கு நவாஸ் ஷெரிப்புக்கு எதிரானது மட்டுமல்ல, பாகிஸ்தானில் உள்ள 20 கோடி மக்களின் போர். இதை சந்திப்பதற்காக அவர் பாகிஸ்தான் திரும்பியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.