உலகம்

இடிக்கப்படப்போகும் அட்லாண்டிக் கடல் தீவிலுள்ள உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆய்வகம்

EllusamyKarthik

வட அட்லாண்டிக் கடலில் உள்ள புயர்டோ ரிக்கோ தீவில் அமைந்துள்ள  உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆய்வகமான அரிசிபோ அப்சர்வேட்டரி இடிக்கப்பட உள்ளதாக அமெரிக்க அறிவியல் கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைநோக்கி என கருதப்படும் இந்த அப்சர்வேட்டரி மூலம் விண்வெளியில் அழமான ஆய்வில் ஈடுபடவும், தொலைதூர வானொலி அலைகளைக் கேட்கவும் கடந்த 57 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 

இந்த ஆய்வகத்தின் ஒரு பகுதி கடந்த ஆகஸ்ட் மாதம் விபத்தினால் சேதமடைந்துள்ளது. அதனை சரிசெய்ய பல முயற்சிகளை பொறியாளர்கள் மேற்கொண்டும் அவை பலனளிக்கவில்லை. 

இந்நிலையில் இதனை தாங்கிப்பிடித்து உள்ள மற்றொரு கேபிள் அறுந்து விழுந்தால் 300 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் 900 டன் திணிவுடைய Platform ஆனது 1000 அடிகள் விட்டம் கொண்ட டிஷ் விழுந்து நொறுங்கும் நிலை ஏற்படும். 

இதையடுத்து அரிசிபோ அப்சர்வேட்டரி இடிப்பதற்கான முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.