சுனிதா வில்லியம்ஸ் கூகுள்
உலகம்

நீண்டநாள் தங்கியதால் உடல்நிலை பாதிப்பா?.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சுனிதா வில்லியம்ஸ்!

நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியதால், விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உடல் நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Jayashree A

போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.

நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியதால், விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உடல் நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ்

கன்னங்கள் ஒட்டி, எலும்பும் தோலுமாய் சுனிதா காணப்படும் புகைப்படம் ஒன்றைக் கண்டு தான் மூச்சடைத்துப்போனதாக சுனிதாவின் சக ஊழியரான நாசா ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார், அவரும் நாசாவில் பணியாற்றுபவர் என்பதால், சுனிதாவின் நிலை அவருக்கு நன்றாகத் தெரியும். இதையடுத்து பல்வேறு ஊடகங்களும் வலைதளங்களும் சுனிதாவின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பி வந்தன.

பூமியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு செல்லும்போது அவரது உடல் எடையானது சுமார் 63 கிலோவாக இருந்தது. விண்வெளிநிலையத்தில் தங்கியிருக்கும் வீரர்கள் தங்களின் உடல் எடையை சீராக பராமரிக்க அவர்கள் தினமும் 3,500 முதல் 4,000 கலோரிகள் கொண்ட உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அளவு குறையும்போது, உடல் எடை வேகமாக குறைந்துவிடும் என்கிறார் சுனிதாவின் சக நாசா பணியாளர்.

இன்னொன்று என்னவென்றால், விண்வெளியில் பெண்களுக்கு உடற்சிதை மாற்றமானது (metabolism) ஆண்களைவிட வேகமாக தசை இழப்பு பெண்களுக்கு ஏற்படும் இதற்காக விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருக்கும்போது, அவர்களுடைய எலும்புகளையும் தசையையும் வலிமையாக வைத்துக்கொள்வதற்காக தினமும் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக உடற்பயிற்சி செய்யவேண்டும். அதன்படி சுனிதா தனது உடல்நலம் மீது கவனம் செலுத்திவருவதாக நாசா செய்தித்தொடர்பாளார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையம்

இதுகுறித்து விண்வெளிநிலையத்தில் இருக்கும் சுனிதா தனது உடல்நலத்தைக்குறித்து வீடியோ நேர்காணல் ஒன்றில் பேசுகையில் "நான் இங்கு வந்தபோது இருந்த அதே எடையுடன் தான் இருக்கிறேன். தசை மற்றும் எலும்பு அடர்த்தியில் மைக்ரோ கிராவிட்டியின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்காக விண்வெளி வீரர்கள் பின்பற்றும் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருவதன் காரணமாகவே எனது உடலின் தோற்றம் மாறிவிட்டது. சைக்ளிங்க், டிரெட்மில்லில் ஓடுதல் மற்றும் பளு தூக்குதல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை வழக்கம்போல் செய்து கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் மேற்கொள்வதால் என உடலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். எனது உடல் மாறி இருந்தாலும் அதே எடையில்தான் இருக்கிறேன்” என்று வில்லியம்ஸ் கூறினார் .

நாசாவும், விண்வெளிநிலையத்தில் இருக்கும் வீரர்கள் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.