இலங்கையில் அடுத்த மாதம் 21ஆம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான 38 வயதான நமல் ராஜபக்ச போட்டியிடக்கூடும் என தகவல் கசிந்துள்ளது.
முன்னதாக மகிந்தாவும், கோத்தபயவும் தேர்தலில் போட்டியிட விரும்பினாலும், கடந்த கால அனுபவங்களால் அவர்களுக்கு ஆதரவு கிடைக்காது என்பதால் நமல் ராஜபக்சவை களமிறக்க ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல அதிபர் வேட்பாளராக கட்சியின் மூத்த உறுப்பினர் தம்மிக்க பெரேரா போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், அந்த முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெராமுனா கட்சி பரிசீலிக்க இருப்பதாக கட்சி தலைமை கூறியுள்ளது. ஒருவேளை நமல் ராஜபக்சே போட்டியிட்டால் இலங்கை அரசியலில் மிக குறைந்த வயதில் களமிறங்கும் வேட்பாளர் என்ற பெருமையை அவர் பெறுவார்.