உலகம்

"நானும் எனது தந்தையும் எந்த நாட்டிற்கும் ஓடிப்போகவில்லை" - ராஜபக்ச மகன் அறிவிப்பு

"நானும் எனது தந்தையும் எந்த நாட்டிற்கும் ஓடிப்போகவில்லை" - ராஜபக்ச மகன் அறிவிப்பு

Sinekadhara

'’நானும் எனது தந்தையும் எந்த நாட்டிற்கும் ஓடிப்போகவில்லை’’ என ராஜபக்ச மகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

கடந்த திங்கட்கிழமை இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது ராஜ்பக்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு வன்முறை தூண்டப்பட்டது. இந்நிலையில் பிரதமர் பதவியிலிருந்து விலகியதால் சொகுசு மாளிகையில் இருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்ச. தொடர்ந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிக்கும் நிலையில் வெளிநாடு தப்பிச்சென்றார் மகிந்த ராஜபக்சவின் 2வது மகன். அவரைத்தொடர்ந்து மருத்துவ சிகிச்சை என்ற காரணத்தைக்கூறி மகிந்தவும் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி வந்தன. 

இந்நிலையில் தனது தந்தையும் தானும் எங்கும் செல்லவில்லை என ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ‘’கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன்.

எனது தந்தை ராஜபக்சவுக்கோ எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை. அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார். கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன்’’ என நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.