நஸித் இஸ்லாம், ஷேக் ஹசீனா pt web
உலகம்

மாணவர் புரட்சியால் நாட்டைவிட்டே வெளியேறிய ஹசீனா... மாணவர் புரட்சியை ஒருங்கிணைத்தவர் யார்?

பதினைந்து ஆண்டுகாலம் வங்கதேசத்தை ஆண்டுவந்த ஷேக் ஹஸீனா, பிரதமர் பதவியில் இருந்து இறங்கி, நாட்டை விட்டு வெளியேறக்காரணம் அங்கு வெடித்த மாணவர் புரட்சி. இந்த புரட்சியை ஒருங்கிணைத்தவர் யார் என அறிந்து கொள்ளலாம்.

PT WEB

எப்போதும் நெற்றியைச் சுற்றி வங்கதேச கொடியை சுற்றிக்கொண்டபடிதான் காட்சியளிப்பார் NAHID ISLAM. சமூகவியல் மாணவரான இந்த 26 வயது இளைஞர்தான், ஹஸீனா அறிவித்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்தவர். கடந்த ஜூலை மாத மத்தியில் இவரையும் டாக்கா பல்கலைக்கழக மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்தபோது இவர் தேசிய அளவில் பிரபலமானார்.

நஹித் இஸ்லாம்

நஹித்தை பிடித்துச்சென்ற வங்கதேச ராணுவம், அவரை கடுமையாக அடித்து துன்புறுத்தியது. பலத்த காயங்களுடன் நினைவு தப்பிப்போன நிலையில் சாலையில் வீசப்பட்டுக்கிடந்தார் நஹித். அதன்பிறகும் அவர் போராட்டத்தில் இருந்து விலகவில்லை. மீண்டும் போராட்டக்களம் புகுந்தார்.

மாணவர் கிளர்ச்சியில் 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் மாணவர்கள். அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்த நஹித், ராணுவத்தின் தலைமையில் அமைக்கப்படும் எந்த அரசையும் ஏற்கமாட்டோம் என்றும், இடஒதுக்கீட்டு எதிர்ப்பு போராட்டங்களில் சிந்தப்பட்ட ரத்தத்திற்கு துரோகம் இழைக்க விடமாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

சமூக நீதி, பாதுகாப்பான வாழ்க்கை, புதிய அரசியல் களம் என புதிய வங்கதேசத்தை உருவாக்குவோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 17 கோடி வங்கதேச மக்களை பாசிச ஆட்சியின் பிடியில் மீண்டும் புக விடமாட்டோம் என்று கூறியுள்ள நஹித், வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்துக்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத்தலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று மாணவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.