ஜெர்மனியில் உள்ள பால்டிக் கடல் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் நீளமுடைய 10 ஆயிரம் ஆண்டுகால பழமையான சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் உள்ள பால்கடிக் கடலுக்கு அடியில் கற்கால சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பாவின் மிகப்பழமையான கற்காலத்தை சேர்ந்த கட்டிடத்தின் எச்சமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மேலும் இது ஐரோப்பிய மனிதர்களால் கட்டப்பட்ட மிகப்பழமையான “mega structure ” அதாவது ராட்சத கட்டமைப்பாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மெக்லென்பர்க் விரிகுடாவில் மல்டி பீம் சோனார் கருவியின் உதவி கொண்டு விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த ராட்சத சுவர் இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து National Academy of Sciences யில் குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், “ஜெர்மனியில் உள்ள பால்கடிக் கடலுக்கு அடியில் கற்கால சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் 971 மீ நீளம் வரை நீண்டுள்ளது. இந்த சுவர் குறித்து சோதித்து பார்த்ததில் 1673 கற்களை கொண்டு உருவாக்கப்பட்டுக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் இந்த கற்கள் ஓவ்வொன்றும் மிகுந்த எடைகொண்ட கற்களாக, மனதர்களால் நகர்ந்த முடியாத அளவிற்கு உறுதி வாய்ந்தது. இது சுனாமி அல்லது பனிப்பாறை இயற்கை பேரிடர் காரணமாகவோ, இயல்பாக உருவானதாகவோ இருக்க வாய்ப்புகள் இல்லை .இந்த சுவர் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடும் சமூகத்தினரால் கட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளனர்.