உலகம்

”இந்த தருணத்தை என் தாய் ஷியாமளா நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்” : கமலா ஹாரிஸ் பெருமிதம்

”இந்த தருணத்தை என் தாய் ஷியாமளா நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்” : கமலா ஹாரிஸ் பெருமிதம்

Veeramani

அமெரிக்க துணை ஜனாதிபதியாக நான் இருப்பதற்கு தனது தாய் ஷியாமளா கோபாலன் தான் பொறுப்பு என்று கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

தனது வெற்றிக்குப் பிறகு அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் வெற்றி உரையின் போது. தனது மறைந்த தாயை நினைவு கூர்ந்தார், "இன்று நான் இங்கு இருப்பதற்கு மிகவும் பொறுப்புடைய பெண்ணான எனது தாய் ஷியாமலா கோபாலனுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார்.

அவர் மேலும் கூறுகையில் “ என் தாய் இந்தியாவில் இருந்து 19 வயதில் இங்கு வந்தபோது, இந்த தருணத்தை அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் ... ஆனால் அமெரிக்காவில் இது போன்ற சாத்தியங்கள் உண்டு என மிகவும் ஆழமாக அவர் நம்பினார்." என தெரிவித்தார்