உலகம்

என்னுடைய தாய், மனைவி மிரட்டப்பட்டார்கள்: குல்பூஷன் புதிய வீடியோ வெளியீடு

என்னுடைய தாய், மனைவி மிரட்டப்பட்டார்கள்: குல்பூஷன் புதிய வீடியோ வெளியீடு

rajakannan

இந்தியத் தூதரக அதிகாரியால் தன்னுடைய தாய் மற்றும் மனைவி மிரட்டப்பட்டார்கள் என்று பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவ் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானுக்கு எதிரான பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்ததாக இந்தியாவின் முன்னாள் கப்பற்படை அதிகாரி குல்பூஷான் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டார். தற்போது குல்பூஷன் பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷனை அவரது தாய் மற்றும் மனைவில் கடந்த டிசம்பர் மாதம் பார்த்தனர். அப்போது, குல்பூஷன் பேசியதாக பாகிஸ்தான் முதல் வீடியோ ஒன்றினை வெளியிட்டது. அதில், தன்னுடைய மனைவி மற்றும் தாய் சந்திக்க ஏற்பாடு செய்த பாகிஸ்தான் அரசுக்கு அதில் நன்றி தெரிவித்திருந்தார். 

இதனிடையே, குல்பூஷனை சிறையில் சந்தித்த போது அவரது மனைவி மற்றும் தாய் அவமரியாதையா நடத்தப்பட்டதாக இந்திய அரசு குற்றஞ்சாட்டியது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் பாகிஸ்தான் அரசின் நடவடிக்கை குறித்து குரல் எழுப்பினர். பாகிஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

இந்நிலையில், குல்பூஷன் ஜாதவ் பேசியதாக பாகிஸ்தான் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியத் தூதரக அதிகாரியால் தன்னுடைய தாய் மற்றும் மனைவி மிரட்டப்பட்டார்கள் என்று குல்பூஷன் ஜாதவ் கூறியுள்ளார். அந்த வீடியோவில், “அவர்கள் கண்களில் அச்சத்தை பார்த்தேன். சந்திப்பின் போது எனது தாய் பயத்துடனே காணப்பட்டார். நான் ஆரோக்கியமுடன் இருப்பதைக் கண்டு எனது தாய் மகிழ்ச்சி அடைந்தார். கவலைப்படாதீர்கள் அம்மா என்று நான் கூறினேன். சிறையில் நான் நல்ல முறையில் கவனித்துக் கொள்ளப்படுகிறேன். அவர்கள் எனக்கு எந்தத் துன்புறுத்தலும் செய்வதில்லை. என்னை அவர்கள் தொடுவது கூட இல்லை. நான் இன்னும் இந்தியக் கடற்படையின் அதிகாரிதான்” என்று பேசி உள்ளார்.