உலகம்

முஸ்லிம் பள்ளி சிறுமியின் கையில் கைவிலங்கு பூட்டிய கொடுமை!

முஸ்லிம் பள்ளி சிறுமியின் கையில் கைவிலங்கு பூட்டிய கொடுமை!

webteam

அமெரிக்காவில் புனித ரமலான் நோம்பை கடைபிடித்து வரும் சிறுமியின் ஹிஜாப்-ஐ பள்ளி நிர்வாகத்தினர் வலுக்கட்டாயமாக அகற்றியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் மினசோட்டா பகுதியில் உள்ள ரோஸ்மவுண்ட் வெலி உயர்நிலை பள்ளியில் பயின்றுவரும் இஸ்லாமிய சிறுமி ஒருவருக்கும், வகுப்பு தோழன் ஒருவனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அந்த சிறுமியை தீவிரவாதி என்று சிறுவன் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளி பாதுகாப்பு அதிகாரி, எந்த விசாரணையையும் நடத்தாமல் இஸ்லாமிய சிறுமியின் கையில் விலங்கு மாட்டி, அவர் தலையில் அணிந்திருந்த ஹிஜாபை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து சிறுமி கூச்சலிட்டதால், பள்ளி நிர்வாகத்தினர் இதுதொடர்பாக அப்பகுதி போலீசாரிடம் புகார் அளித்தனர்.

சிறுமியை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய பின் சிறுமியை விடுவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவில் வாழும் இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக மாவட்ட ஒழுங்குமுறை ஆணையத்திடம் இஸ்லாமிய அமைப்புகள் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தின் மேல் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.